Tuesday, May 15, 2012

கடற்கரை



 நேற்று இரவு , வழக்கு எண் 18/09   படத்திற்கு செல்லலாம் என சென்றேன் .டிக்கெட் கிடைக்கததால் நேரடியாக வீடு செல்ல மனமில்லாமல் வாகனத்தை கடற்கரைக்கு ஓட்டினேன் . மிக நீண்ட நேரம் கடற்கரையில் செலவிட்டேன் . என்   மூட் தெரிந்து FM  மிலும் நல்ல அழகான பாடல்கள் ஒளிபரப்ப பட்டது . எத்தனை எத்தனை மனிதர்கள் . நைட் பத்தரை  ஆனாலும்  வீடு திரும்ப மனமில்லாமல் ஒரு குடும்பம் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தது . அந்த குழந்தை தேவ பாஷையில் எதோ எதோ பேசிக்கொண்டு 
 விளையாடிக் கொண்டிருந்தது . 

கொஞ்ச தூரம் தள்ளி நான்கைந்து இளைஞர்கள் சோம பானமும்,சுறா பானமும் அருந்தி கொண்டிருந்தார்கள் .எப்போதும் போல தான்,.... நான்கு பேர் உட்கார்ந்து தண்ணியடித்தால் ஒருவன் தன் தோற்று போன காதலை பற்றியும் , ஒருவன் இன்னும் தோற்று போகாத காதலை பற்றியும் பேசுகிறான் . ஒருவன் பொண்ணுங்க னாலே கடுப்பாருக்கு என்கிறான் .  


அந்த நேரத்திலும் ஒருவனும் ,ஒருத்தியும் கடலை வறுத்துக் கொண்டிருக்கிறார்கள் . அந்த ஒருத்தியின் வீட்டில் தேட மாட்டர்களா , தெரியவில்லை . 
சிகையை வைத்து மட்டுமே யுவனா?, யுவதியா? என்று அடையாளம் காண முடிகிற அளவிற்கு ஒரு கூட்டம் , சாதாரண மாருதி அல்டோ தான் , அதை வைத்து கொண்டு, சத்தமாக பாட்டு போட்டு கொண்டும் சீன் போட்டுக் கொண்டும் இருந்தது .சந்தோசமாக இருப்பது தப்பு என சொல்ல வில்லை. இந்த மாதிரி கூட்டங்கள் , மற்றவர்களுக்கு தொந்தரவாகவும் , தங்களை மட்டும் சமுகத்திலிருந்து  வேறாகவும் காட்டி கொள்கின்றன . தெரிந்தாலும் தமிழ் பேசுவதில்லை . அதற்காக ஆங்கிலத்தில் பெரிய மேதைகளும் இல்லை . இதுங்களுக்கு ஷேக்ஸ் பியரோ , கீட்ஸ் யோ தெரியாது . தெரிந்த தெல்லாம் பிரிட்னி பியர்சும் , டாம் க்ருஸ் ம் தான் . 

இது எதை பற்றியும் அலட்டி கொள்ளமால் பக்கத்து குப்பத்து இளைஞர்கள் பாயுடன் உறங்குவதற்கு சென்று கொண்டிருந்தார்கள் . 

நான் வீடு திரும்பும் பொது மணி 12!   இந்த கடற்கரைக்கு வந்துதான் எத்தனை நாட்கள் ஆகின்றன ? , அதீத வேலை பளுவால் இப்போதெல்லாம் முன்பு போல் கடற்கரைக்கு செல்வதில்லை . கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு வானத்தையும் கடலையும் பார்க்கும் போது தான் தோன்றுகிறது இந்த உலகம் எவ்வளவு பெரிய தென்று . கடற்கரையிடம் தன் கவலைகளையும் ,காதலையும் பகிர்ந்து கொள்ளாத மனிதரும் யாராவது இருப்பாரா என்ன ? , இந்த கடற்கரை எத்தனை பேருக்கு ஆறுதலாக , சந்தோசமாக ,பிழைப்பு தரும் இடமாக , ம்ம்ம் ... சிலருக்கு தவறு செய்யும் இடமாக கூட விளங்குகிறது( தவறு என்று சொல்லும்போது ஒருநாள் எனக்கு பக்கத்தில் அமர்ந்த பயணி சொன்ன கவிதை நினைவுக்கு வருகிறது .
''கண்ணகியின் சிலைக்கு பின்னால்...
கற்பு விலை பேச படுகிறது'' )
 எத்தனை உணர்வுகள் கொட்டி கிடக்கின்றன இங்கே ? 

முதல் முதலாக ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது இந்த கடலை ,  மெரினா வில்  முதல் முதலில் சந்தித்தேன் .அப்போதெல்லாம் சென்னை என்றால் VGP ,மெரினா, மகாபலிபுரம் ,முதலைப் பண்ணை  அவ்வளவுதான் . திரும்ப செல்லும் அலைகள்  காலடியிலிருந்து மணலை இழுத்து செல்லும் போது என்னை இழுத்து சென்றது போல் இருந்தது கண்டு சிலிர்த்தேன் . ஆனால் அப்போதே எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் கடலில் விழுந்து ஆசை தீர குளிக்க ஆசைப்பட்டேன் .என் ஆசையை வெளிப்படுத்திய போது அனுமதிக்கு பதில் அப்பாவிடம் இருந்து அடி தான் கிடைத்தது .

பின் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது ,பள்ளி சுற்றுலா , மகாபலி புரம் சென்றோம் .அப்போது எனக்கு பஸ்சில் பக்கத்து சீட்டில் சிவரஞ்சனியை உட்கார வைத்து விட்டார்கள் என்று எனக்கு கோபமும் ,அழுகையுமாக (!) வந்ததது .   'இந்த வயசில் உனக்கு என்னடா பொண்ணு பக்கத்தில் உட்கார கூச்சம் '  என்று சரோஜா  டீச்சர் விட்ட அறையில் UPSET ஆனதால் அன்று சரியாக கடலிடம் பேசவோ பழகவோ இல்லை .

அதன் பிறகு ,ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்த கடலை ( எல்லாம் ஒரே கடல் தானே , இன்னும் கேட்க போனால் உலகம் முழுவதும் ஒரே கடல்தான் ,  நாம் தான் வேறுவேறாக பேர் வைத்துள்ளோம் ) வேளங்கன்னியில் பள்ளி சுற்றுலா சென்ற போது மீண்டும் சந்தித்தேன் . அன்று தான் எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது . எல்லோரும் மாதா கோவிலில் வழி பாட்டில் இருந்த போது நங்கள் மட்டும் தப்பித்து கடலுக்கு வந்து விட்டோம் ..கடலில் விழுந்து ஆசை தீர குளித்தோம் .என் கூட குளித்தவர்கள் எல்லாம் 10TH STD  ( அதில் என் அண்ணனும் ஒருவன் ) நான் மட்டும் தான் சின்ன பையன் ,  6TH STD ,கொஞ்ச தூரத்தில் கண்ணுக்கு தெரிந்த ஒரு படகை பிடிக்க எனக்கும், எங்க அண்ணனுக்கும் போட்டி .நீண்ட நேரம் முயற்சி செய்தும் அந்த படகை நெருங்க முடியாமல் திரும்பி பார்த்தால் ,உடன் குளித்த ஒரு பயலையும் காணோம் . கரையோரம் சரோஜினி டீச்சர் கடலில் குளித்துக்கொண்டிருந்த எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார் . என்னால் மட்டும் தப்பித்து செல்ல முடியாது போனது .ஏன் என்றால் எனது சட்டையும் ,பேண்டும் சரோஜினி டீச்சரின் காலுக்கு கீழே இருந்தது .வேறு வழியில்லாமல் அவர்களுக்கு பக்கத்தில் போய், ' கொஞ்சம் தள்ளி நில்லுங்க மிஸ் , என் டிரஸ் ய் எடுத்துக்கிறேன்'  ,என்றேன் .  எனது கன்னத்தில் மாறி , மாறி அறைந்தார் சரோஜினி மிஸ் . வேறு வழியே இல்லாமல் ஓடிப் போகவும் முடியாமல் அவங்க TIRED  ஆகறவரைக்கும் அடி வாங்கிட்டு அப்புறமா டிரஸ் எடுத்திக்கிட்டு வந்தேன் .


சட்ட கல்லூரி வந்த வுடன் முதலில் நான் தங்கி இருந்தது திருவல்லிகேணியில் , மாலை கல்லூரி முடிந்தவுடன் கொஞ்ச நேரம் மெரினா வில் உட்கார்ந்து கொண்டிருப்பேன் . அப்போதெல்லாம் சென்னையில் எனக்கு இருந்த ஒரே நண்பன் இந்த கடற்கரை தான் . எனது கல்லூரி , எனது DREAM GIRL  ,தனிமை ,ஏமாற்றம் என நான் பேசும் எல்லாத்தையும் கேட்டு விட்டு ஒரே பதிலை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பான் இந்த கடல் நண்பன் . ஒரு நாள் , ரொம்ப அருகில் உட்கர்ந்து இருந்த போது அலை வந்து ஏன் நோட்டை அடித்து  சென்று விட்டது . அப்புறம் எப்படியோ தடுமாறி எடுத்தேன் .அதெல்லாம் ஒரு காலம் .அப்போதிருந்த அப்பாவி அசுவத்தாமனை இப்போது தேடினாலும் கிடைக்காது .


சுனாமி வந்த போது அரசாங்கம் வழங்கிய நிவாரணங்கள் ஒழுங்காய் மக்களிடம் போய் சேர்ந்ததா என்று ஆராய நாங்கள் ஒரு குழுவாக சட்ட கல்லூரியில் இருந்து கிளம்பி சென்றோம் .நான் கடலோடு மிக நெருக்கமாக பழகியது அந்த நாட்களில் தான் . சென்னையிலிருந்து பாண்டி எல்லை வரை அனைத்து கிராமங்களுக்கும் சென்றோம் .சிறுவயதிலிருந்து எனக்கு மீன் பிடிக்காது .அந்த கேம்ப் க்கு பிறகு தான் மீன் சாப்பிட ஆரம்பித்தேன் .மீனவர்களுடன் FYBER   போட்டில் நடுக்கடலுக்கு சென்றோம் அங்கு கடலில் விழுந்து குளித்ததெல்லாம் மறக்க முடியாத அனுபவம் . கடலில் நீந்து வது  ரொம்ப கடினமாக இருந்தது . உப்பு நீர் என்பதால் அதிக கடினமாக இருக்கிறது .மீனவர்கள் வாழ்க்கை ஒன்றும் சாதாரண மானதில்லை . ஒரு நீண்ட கழியில் என்ஜின் கட்டி அதை வைத்து தான் போட் ஓட்டுவார்கள்.அதை வாங்கி பிடித்து பார்த்தேன் .என்னமாய் அதிருகிறது தெரியுமா ? 

இதை பற்றி என்னுடன் வந்த சிலம்பரசனிடம் நான் சொல்லும் போது ,  அவன் ஒரு கேள்வி கேட்டான் . நானும் அதைப்பற்றி தீவிரமாக யோசித்தேன் . கேள்வி இதுதான்,     திடிர் என இந்த என்ஜின் பழுதடைந்தால் என்ன செய்வார்கள் . ?

அப்புறமாக FM மில் ஒரு நல்ல பாட்டு போடவும் எங்களுக்கு அங்கேயே ஒரு சின்ன டான்ஸ் போட வேண்டும் போல இருந்தது . மனசு ஒரு விஷயத்துக்கு ஆசை பட்டா அதை செஞ்சிடனும் .ஏன்னா , மனசு ஒரு நாய்க்குட்டி மாதிரி,  ரொம்ப கட்டி போட்டே வைச்சிருந்தா வெறி பிடிச்சிடும் .( ரொம்ப அவுத்து விட்டா  தெரு நாயா ஆகிடும் ங்கறது வேற விஷயம் ) . கடல் அலை கால்களை நனைக்க,நானும் சிலம்புவும்  ஒரு சின்ன ஆட்டம் போட்டு விட்டு கிளம்பினோம் .