மழைக்காலங்களில்தான் பள்ளிக் குழந்தைகள் அதிகம் செய்திகள் பார்க்கிறார்கள் . பள்ளி மறுநாள் விடுமுறையா என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் .பலரும் வரலாறு காணாத மழை என்கிறார்கள் .எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை .இதுபோன்ற இதைவிட பெரிய மழைஎல்லாம் தமிழகம் சந்தித்திருக்கிறது .ஆனாலும் இனி பொழியும் ஒவ்வொரு மழையும் நமக்கு பெரிய மழையாகத்தான் தெரியும் . காரணம் நாம் எல்லா நீர் ஆதாரங்களையும் அழித்து வருகிறோம் .அரசாங்கங்களே பெரிய ஏரிகளை அழித்துவிட்டு பேருந்து நிலையங்கள் கட்டுகின்றன .எனக்கு தெரிந்து எல்லா ஊர்களிலும் புதிய பேருந்து நிலையங்கள் எல்லாம் ஒரு ஏரியை ஏறி மிதித்துகொண்டுதான் உருவாகியுள்ளது .
உதரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள அதன் கட்டுமானப் பணிகளின் புகைப்படங்களை பார்த்தால் தெரியும் எவ்வளவு பெரிய ஏரியை அது விழுங்கியிருக்கிறது என்று .விழுப்புரத்தில் பேருந்து நிலையம் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,மாவட்ட காவல் துறை அலுவலகம் ,கல்வி மற்றும் விவசாய துறைகளுக்கான மாவட்ட அலுவலகங்கள் எல்லாம் கம்பிரமாக நிற்பது ஒரு பெரிய ஏரியை புதைத்த இடத்திலதான் .
எனக்கு நகரங்கள் எல்லாம் நீர்நிலைகளின் சுடுகாடகத்தான் தெரிகிறது எனது ஊரான உளுந்தூர்பேட்டையில் கூட 108 குளங்கள் இருந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது .


No comments:
Post a Comment