Thursday, April 5, 2012

தமிழா, நாளை உன் நாளே , இன்று ?

உளவியலில் ஒரு தத்துவம் ஒன்று உள்ளது ,ஒரு மனித மனம் பெண்டுலம் கடிகாரம் போன்றது. அதாவது ஒரு திசையில் பயணித்தால் அதற்கு எதிர் திசையில் பயணித்தே தீரும் .ஒரு விதமாக வாழும் மனிதன் அப்படியே அதற்கு நேர் எதிராக மாறுவதை நாம் வாழ்வில் கண்டிருப்போம் .நீங்கள் '' சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமீ " படத்தை பார்த்திருக்கீறீர்களா ?, எந்நேரமும் தண்ணி அடித்துக்கொண்டிருக்கும் தங்கர் பச்சான் , சபரி மலைக்கு சென்று வந்தவுடன் , குடும்பத்தையே கூட கவனிக்காமல் முழு நேரமும் பூஜை ,புனஸ்காரம் என சாமியார் போல ஆகிவிடுவார் .

அநியாயத்திற்கு நல்லவனாக இருப்பவர்கள் படு கெட்டவனாகவும் ,கேடு
கெட்டவர்கள் தீடீர் என்று பயங்கர நல்லவர்களாகவும் மாறிவீடுவார்கள். ஒரு விசியத்தில் நாம் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தோமோ ,அதே அளவிற்கு நாம் விலகும் சூழ்நிலையும் நம் வாழ்வில் சந்திந்திருப்போம்.
இதை விளக்க சு.கி. சிவம் ஒரு கதை சொல்வார் .
ஒரு ஊரில் ஒரு மோசமான,பணக்கார , பெண் பித்தன் இருந்தானாம் .எந்த அளவிற்கு என்றால் அவன் படி ஏறும் பொது கூட பெண்களை நிற்க வைத்து அவர்களின் தோளில் கை வைத்து ஏறி செல்வனாம் . அந்த அளவிற்கு பெண் பித்தன் . தீடீர் என்று ஒரு நாள் மனம் திருந்தி ஒரு சாமியாரிடம் போய் (இப்போதெல்லாம் சாமியார்கள்தான் அப்படி பெண் பித்தர்களாக இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம் ),''நான் உலக இன்பங்களை வெறுத்து விட்டேன் ,என்னை உங்கள் சீடராக
சேர்த்துக்கொள்ளுங்கள்'' என்றானாம் .  அந்த சாமியாரின் உடன் இருந்த அவரது சீடர்கள் அவனை சேர்த்துக்கொள்ள வேண்டாம் ,அவனால் திருந்தவே முடியாது ,அவனால் பெண் வாசம் இல்லாமல் வாழவே முடியாது என்று கூறினார்கள் . சிறிது நேரம் யோசித்த சாமியார் அவனை சீடனாக சேர்த்துக்கொண்டார் . சிறிது நாட்களுக்கு பிறகு அவன் ஊரே மெச்சும் அளவிற்கு துறவர வாழ்வில் சிறந்து விளங்கினனாம் . அதாவது எந்த அளவிற்கு உலக இன்பங்களில் ஈடுபாட்டுடன் இருந்தானோ அந்த அளவிற்கு விலகி ஓடி இருக்கிறான் .ஒன்று இந்த end ,
இல்லை அந்த end , இதுதான் BENDULAM CONCEPT .

ஆனால் நான் யோசிப்பதெல்லாம் ,இந்த பெண்டுலம் கான்செப்ட் , வெகு ஜன உளவியலுக்கும் பொருந்துமோ ? என்பதுதான் .என்னுடைய கேள்வி எல்லாம் எப்படி இந்த தமிழ் இனம் தடு மாறி,தடம் மாறி போனது ? எந்த அளவிற்கு தன்மானத்துடன் வாழ்ந்தோமோ ,அந்த அளவிற்கு இன்று கேவலப்பட்டு நிற்கிறோம் .

நமக்கு அருகில் தமிழ் ஈழம் அழிந்த போது , அதை மறக்க நமக்கு IPL CRICKET போதுமானதாக இருந்தது .நம் அழிவிற்கு நாமே உலக மாநாடு வேறு நடத்தினோம் .இன்னும் பல வருடங்கள் கழித்து நமது பிள்ளையோ ,பேரனோ, வரலாற்றில் ஈழ தமிழ் மக்களின் அழிவை படித்து விட்டு ,அந்த இனப் படுகொலைகள் நீங்கள் வாழ்ந்த காலத்தில் தானே நடந்தது அப்போது  என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? என்று நம்மை பார்த்து கேட்கும் போது நாம் என்ன செய்ய போகிறோம் ?
அது வெளி நாட்டு பிரச்சனை ,நாம் என்ன செய்ய முடியும் ? என்று கேட்கும் படித்த அறிஞர்களே ,அதை விடுங்கள், நமது மீனவர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதை எதை பேசி நியாப்படுத்த போகிறீர்கள். மூன்று கேரளத்தவர்களை சுட்ட இத்தாலியர்கள் இன்னும் சிறையில் , அந்த கப்பலை மூன்று கோடி பிணையில் விடுவித்திருக்கிறார்கள். இத்தாலி இலங்கையைவிட பல மடங்கு வல்லரசு . மும்பை தாக்குதலின் போது நமக்கு உதவுவதாக அறிவித்த நாடு . கேரளதவர்களுக்காக இத்தாலியையே கேள்வி கேட்கும் இந்திய அரசு , தமிழர்களுக்காக இலங்கையை பகைத்து கொள்ளாது. ஏன் , கேவலம் தமிழன்தானே ,.

ஆஸ்ரேலியா வில் ஒரு சிங் துறவி தாக்கப்பட்ட போது ,  ஒன்றரை கோடி மக்கள் தொகை உள்ள சிங் இனத்தவர்களுக்காக அவ்வளவு பெரிய வல்லரசான ஆஸ்ரேலியா வையே கேள்வி கேட்கும் நமது மாண்புமிகு மன்மோகன் ,ஏழு கோடி தமிழர்களுக்கு மதிப்பளித்து இந்த துக்கடா நாடான இலங்கையை எதுவும் கேட்க மாட்டார் .அது சரி .போரை நடத்தியதே இவர்கள் தானே .


இப்போது கூட ஜெனிவா தீர்மானத்தில் இந்தியா ஆதரவு தந்த விசயத்தில் , இந்தியா மதிப்பளித்தது தமிழர்களின் உணர்வுக்கா இல்லை அமெரிக்காவின் உணர்வுக்கா ?

கூடங்குளம் அணு உலையை கண்டு அருகில் உள்ள இலங்கை பயப்படுகிறது .பேரழிவு இடர் மீட்பு ஒப்பந்த்ததிற்காக இந்தியாவை அழைக்கிறது .ஆனால் நமக்கு பயமில்லை .பயப்படவும் கூடாது . உணர்வுகளுக்கு மதிப்பளித்து பல கோடி போட்டு செய்த விசியத்தை கை விட முடியுமா ? என்கிறார்கள் . ஏனோ இந்த நேரத்தில் எனக்கு சேது சமுத்திர திட்டம் நினைவிற்கு வந்து தொலைக்கிறது .


 உருவாகும் மின்சாரத்தில் நமக்கு சரியான பங்கு வேண்டுமென்று கேட்டுள்ளார் நமது முதல்வர் .இதுவும் கட்சத் தீவு மீட்பு மாதிரி தான் நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான். தருவதாக இருந்தால் நமக்கு நெய்வேலி மின்சாரமே போதுமே. நெய்வேலியில் உருவாகும்  மின்சாரத்தில் 15 % மட்டுமே நமக்கு தரப்படுகிறது .நெய்வேலி அனல் மின் நிலையத்திற்காக நாம் இழந்தது அதிகம் .கடலூர் மாவட்டத்தில் நிலத்திடி நீர் இறங்கி போனதற்கு அதுவே காரணம் .அதாவது நமது வளத்தை சுரண்டி கர்நாடகமும் ,பீகாரும் மின்வெட்டு இல்லா மாநிலமாக திகழ்கிறது (வெள்ளைக் கார அரசாங்கம் நினைவுக்கு வருகிறதா ?) .கூடங்குளமும் அப்படித்தான் , சிம்பிள் ஆ சொல்லணுமுன்னா    ரிஸ்க் நமக்கு  ,   ரஸ்க் அவங்களுக்கு ,.....
இதெல்லாம் விட ஒரு பெரிய விசியம் ,பாகிஸ்தான் க்கு 5000 மெகா வாட் மின்சாரத்தை தர முடிவு செய்துள்ளது நமது பெருந்தன்மையான மத்திய அரசு .அது எப்படி அய்யா உங்களுக்கு எங்களை விட பாகிஸ்தான் காரன் மேல அவ்வளவு பாசம் ?


சமிப கால வரலாற்றில் கூட ,ஒரு மொழி உள்ளே வரகூடாது என்பதற்காக கூட மிகப் பெரிய அளவில் போராடியிருக்கிறோம் .எங்க போனது நமது சொரணை ( வீரம் என்பதெல்லாம் இப்போது நமக்கு பெரிய வார்த்தை) .
என்ன காரணம் ? 


அசோகரைப் பற்றியும் பாபரை பற்றியும் பக்கம் பக்கமாகசொல்லித்தந்த நமது பாடபுத்தகங்கள்,சேர, சோழ, பாண்டிய, தொண்டைமான், பல்லவர்கள் பற்றியெல்லாம் திட்டமிட்டு மறைத்து விட்டனவே ,அதனாலா?


தமிழர்களை உணர்வுபூர்வமாக வழிநடத்திய திராவிட இயக்கங்கள்,பின்னால் வந்த 
தலைவர்களால் அதன் நோக்கமே சிதைந்து போனதை பார்த்து தமிழன் சோர்வடைந்து விட்டானா ? தமிழ் உணர்வு என்றெல்லாம் பேசிவிட்டு கடைசியில் சொந்த லாபங்களுக்காக பால் மாறிவிடும் தலைவர்களால் நொந்து போய்விட்டானா ?

சரி .தமிழனை விடுவோம் . "தமிழன் இனி மெல்ல சாகுவான்" . 

ஆனால் ஒன்று, இந்த வெகு ஜன பெண்டுலம் மீண்டும் எதிர் திசையில் திரும்பும், தமிழன் மீண்டும் பழைய வீரத்துடன் வருவான். அதுதான் விதி. அதனால் நாங்கள் அலட்சியமாக இருக்கிறோம் என்று நீங்களும் அலட்சியமாக இருக்காதீர்கள் இந்திய அரசே, வல்லபாய் படேலின் உழைப்பும் கனவும் வீணாகி விட போகிறது .

Tuesday, April 3, 2012

என் மரியதைக்குரிவளே !

                                                        photography : asuvathaman 
நாலே நாலு தலை ,
படைப்பது தான் வேலை ,
முன்று கடவுளுள் ஒருவன் ,
கருடனாய்க் கூட பிறந்தவன் ,

அவ்வளவு தான் தெரியும் எனக்கு ,
அன்று வரை பிரம்மன் பற்றி ,
அவளைக் கண்ட பின்தான் கண்டு கொண்டேன் ,
அவனுக்கு கவிதை எழுத தெரியும் என்று ! ! ! 

புகை படம்

முன் குறிப்பு : புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடானது .

விவேகானந்தருக்கு புகைப் பழக்கம் உள்ளதென்று நான்  சொல்லும்போதெல்லாம்  நண்பர்கள் யாரும் நம்புவதில்லை .''எனது சிந்தனைகள் '' என்ற புத்தகத்தில், சின்ன வயதில் இந்த விஷியத்தை படிக்கும் போது எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது .'உலகில் எல்லா இன்பங்களையும் நான் துறந்த பிறகு இந்த புகை இலை பயன்படுத்தும் பழக்கம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல ' என்கிறார் விவேகனந்தர் .

ஒருநாள் மயிலாப்பூரில் auditor  ஒருவரை சந்தித்த்தேன் .அனேகமாக 86 லிருந்து 90 வயது இருக்கும் . ஆனால் நல்ல திறமை மற்றும் ஞாபக சக்தி ,சென்னை யில் உள்ள பல  auditor  கள் அவரிடம் கொடுத்து auditing செய்து கொள்கிறார்கள் . நான் அவரை சந்தித்தது கூட அப்படியான ஒரு தருணத்தில் தான். எனது  auditor  அவசர வேலை யாக டெல்லி சென்றிருந்ததால் அவரிடம் சென்று ரிப்போர்ட் டை வாங்கிக் கொள்ள சொன்னார் . அவரிடம் கொடுத்து தான் எனது  auditor  இத்தனை நாட்களாக செய்கிறார் என்று எனக்கு அன்று தான் தெரிந்தது . ஒல்லியான ஆனால் வசீகரமான கிழவர் அவர் . கிங்க்ஸ் சிகரட் புகைத்து கொண்டிருந்தார் .அவர் பிடிக்கும் தோரணையிலேயே தெரிந்தது,  அப்துல் கலாமே அவர் அலுவகத்துக்கு வந்தாலும் அவர் புகை பிடித்துக்கொண்டே தான் பேசுவார் போல .சிகரட்டை ash tray வில் வைத்து நசுக்கிய அடுத்த நிமிடம் அவர் செய்யும் அடுத்த வேலை lighter எடுப்பது தான் .அப்படி ஒரு செயின் ஸ்மோக்கர் ! . ஆனால் எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யம் , எப்படி இவர் இத்தனை வயது வரை ஆரோக்கியமாக  இருக்கிறார் என்று . உளுந்தூர்பேட்டை யில் பழனி வேல் வாத்தியாரை பார்க்கும் போதும் எனக்கு இதே போல ஆச்சர்யம் ஏற்பட்டது உண்டு , அவரை முதலில் 2nd std படிக்கும் போது பார்த்த்தேன் . full மப்பில் பரிதாபமான நிலையில் இருந்தார் .அவரை அன்று பார்க்கும் போது இன்னும் ரெண்டு மாதங்களில் போய் சேர்ந்து விடுவார் என்று நினைத்தேன் . சமிபத்தில் கூட அவரை சந்தித்தேன் , இன்னும் அதே மப்பு வாசனையுடன் அதே போலவே இருக்கிறார் ! 

சட்ட கல்லூரியில் படிக்கும் காலத்தில் , business விஷியமாக ஒருநாள் true  பிஸ்கட் கம்பெனி யின் தலைவரை சந்தித்தேன் . அவரும் தனித்துவமான personality  தான் .அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் . அவரது அலுவலகமே நன்றாக பராமரிக்கப் பட்டிருந்தது .அவரும் நம்ம  auditor  போலவே தான் .முன்றில் ஒரு பங்கு வெட்டுபட்டிறுந்த அவரது ஆள் கட்டி விரலுக்கும் ,நடு விரலுக்கும் நடுவே பில்ட்டர் சிகரட் புகைந்து கொண்டே இருந்தது .மிகவும் ஸ்டைல் ஆக இருந்தார் .அவரது இங்கிலீஷ் , நடவடிக்கைகள் அனைத்துமே ஒரு அலட்சியமான ஆனால் அழகியலுடன் இருந்தது . அவரது attitude க்கு அவரது சிகரட்டும் அழகு சேர்த்தது .

புகை பழக்கம் உள்ள ஆளுமைகளில் (personality) , நான் சந்தித்த இந்த இரு நபர்களையும்  என்னால் மறக்க முடியாது .இப்படியாக ரஜனி காநத மட்டுமல்ல , நம் வாழ்வு முழுதும் புகை பிடிக்கும் ஆளுமைகள் வந்து போகின்றன ,நினைவில் நிற்கின்றன .எனக்கு காலில் surgery  செய்த  டாக்டரிடம் கூட சிகரட் நாற்றம் மணப்பதை  உணர்தேன். ஆபரேஷன் நடக்கும் போது நான் அதிகமாக யோசித்தது இதைத்தான் , புகை பழக்கத்தினால் வரும்  கேடுகள்  பற்றி  நம்மை விட டாக்டர் களுக்கு நன்றாக தெரியுமே , பின்பு எப்படி புகைக்கிறார்கள் .

இங்கு புகைப் பழக்கம் நல்லதா ? கெட்டதா? என்றெல்லாம் நான் பேச வரவில்லை . ஜஸ்ட் இவர்களை பற்றி சொல்கிறேன் அவ்வளவுதான் .