Thursday, September 6, 2012

அழகியலானவள்

ஆணுக்கு அழகு
இயல்பும் தீர்க்கமும் .......

பெண்ணுக்கு அழகு 
நேர்த்தியும் கண்ணியமும் .....

அவள் பெண்களில் அழகானவள் ....!!!

Declare a writ ?

The above question is wandering my mind for ages .I wondered when I , first time , saw the prayer in medical student batch cases .In that case they seeking for the prayer that "Writ of Declaration ". 

Obviously , our constitution did not contained the writ of declaration .  Whether  we able to seek for the writ which is not provided any where in constitution ? Whether advocate can create the writ ? whether we may able to declare the Writ of Declaration as Writ ?     Needless to say relief of declaration is available in Specific Relief Act .

Indeed , we may get the such kind of relief  by way of   ''Writ of Certiorari  ''.   

On the other hand  Art.226 provide the relief  in the sense 'or any of them '. By the language of Art 226 ,we may come to the conclusion that High Court may provide the any other relief  apart from five Writs .  It is noteworthy that Art 32 did not contain such option .But , flagrantly ,it is discretionary of the court . At length , court can provide the relief apart from Five Writs. But we cannot sought for . 

I goggled that when it is emerged , how is it become possible ? Despite i am not able to conclude . O...... my....legal luminaries ! help me ....! 

ஏப்பா தம்பி , நான் சரியா பேசறனா ? 1


அவள் ஏன் அன்று அப்படி ஒரு பார்வை பார்த்தாள்,

அவங்க ஏன் அப்படி சொன்னாங்க ?

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?

ஏன் நான் அப்போவெல்லாம் அப்படி இருந்தேன் ?

இப்ப ஏன் இப்படி நடந்துகிறேன் ? 

அவன் என்னை இன்னும் அப்படி தான் நினைச்சிகிட்டு இருப்பானோ ?

அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் ?

அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் ?

இவங்களுக்கு அந்த விசியம் தெரியுமா ,தெரியாதா ?

இப்படி பதில் தெரியாத எத்தனையோ கேள்விகளை விட்டு செல்கிறது இந்த வாழ்க்கை ....!

பெரும்பாலும் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடுகிறது .ஆனால் கொஞ்சம் தாமதமாக .....சில கேள்விகளுக்கு ரொம்பவும் தாமதமாக ..........

நான் வேண்டுவதெல்லாம் ஒன்று தான் ...

எனக்கு பதில் தெரிய வரும் போது அல்லது பதில் புரியும்போது ,கேள்வியை நான் மறக்காமல் இருக்க வேண்டும்.

Wednesday, September 5, 2012

ஹைதராபாத் – சிறு பயண கட்டுரை

              
தோழியின் திருமணத்திற்காக ஹைதராபாத் சென்று வந்தேன். நான் ஹைதராபாத் செல்வது இதுவே முதல் முறை .இந்திய பெரு நகரங்களில் டெல்லியும் ,பெங்களுருவுமே அதிக பரிச்சயம் . இந்த இரு நகரங்களிலும் எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை . டெல்லி என்றால், விமான நிலையத்தில் இருந்து ஒரு pre paid call taxi  பிடித்து  ‘கரோல் பாக்’ சென்று விழுந்து விடுவேன். அது ஒரு குட்டி தமிழ் நாடு . அதே போல பெங்களூரு என்றால் சொல்லவே தேவை இல்லை .எங்கும் தமிழ் கேட்கலாம் அல்லது அங்குள்ள கன்னடகாரர்களுக்கும் ஓரளவு தமிழ் தெரியும். எனக்கு எப்போதும் தமிழ் காதில் விழுந்து கொண்டேயிருக்க வேண்டும் அப்போதுதான் சந்தோசம் .

பொதுவாக ரயில் பயணங்கள் என்றால் எனக்கு ஒரு HESITATION . சின்ன வயதிலிருந்து அப்படித்தான் .எங்கும் அதிகம் ரயில் பயணங்கள் செய்ததில்லை .அனால் ரயில் பயணங்கள் சுவாரஸ்யமானவை என பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் .அனால் பழகத்தான் இல்லை .இம்முறை ஹைதராபாத் துக்கு ரயிலில் செல்வதாகத்தான் இருந்தது .அப்புறம் அந்த திட்டம் ரத்தாகி நான் விமானத்தில் செல்ல நேரிட்டதில் எனக்கு சந்தோசம் தான் .பொதுவாக பலருக்கு விமானப் பயணம் என்றால் இரவு நேரம் தான் பிடிக்கும் . என் தங்கைக்கு கூட அப்படித்தான் .நகரங்களின் விளக்குகளின் ஒளிகளை காண்பது சந்தோசம் என்பாள். ஆனால் எனக்கு எப்போதுமே பகல் நேர விமானப் பயணம் தான். மேகங்களின் வடிவங்களை ரசித்துக் கொண்டே பயணிப்பது ஒரு தனி சுகம் .அதே போல நாம் பார்த்து பழகிய சென்னையே கழுகுப் பார்வையில் வித்தியாசமாக தெரியும் .அதுவும் கடல் பகுதியை கடக்கும் போது .............சரி ,சரி பகல் நேர விமானப் பயணங்களின் சுவாரசியம் பற்றி நான் பேச ஆரம்பித்தால் ஒரு தனி கட்டுரை வேண்டும் . இப்போ ஹைதராபாத்துக்கு வருவோம் .

அனேகமாக இந்தியாவில் எல்லா நகரங்களிலும் விமான நிலையங்களும் ஒரே மாதிரியாக கட்டப்பட்டு வருகிறது .நம் சென்னையில் கூட இந்தப் பணிகள் நடை பெறுகின்றன. அழகாகத்தான் இருக்கிறது என்றாலும் இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எனக்கு சில உறுத்தல்கள் இருக்கின்றன .விமான நிலையங்களின் அருகே மேம்பாலங்களே இருக்க கூடாது என விதி இருக்கும் போது , இந்த புது விமான நிலையங்களில் entresol  வரை மேம்பாலம் அமைத்திருப்பது பாதுகாப்பானது தானா ?


ஹைதராபாத் ஒரு குறிஞ்சி நிலம் . அதாவது மலையும் மலையை சார்ந்த பகுதியும் .ஊர் முழுக்க மலைகளும் குன்றுகளுமாகவே இருக்கிறது . எல்லா நகரங்களுமே  AIR PORT லும் ,SOFTWARE COMPANY கள் அமைந்துள்ள SPECIAL ECONOMIC ZONE களிலும் அழகாக மிடுக்காக வித்தியாசப் படுகின்றன . ஊருக்குள் வந்து விட்டால் ,எல்லா ஊரும் ஒன்று தான். ஆட்டோக்கள் மட்டும் ஊருக்கு ஊர் வித்தியாசப் படுகின்றன . ஹைதராபாத் சென்னையை விட பெரிய நகரம் .டிராபிக் ம் ரொம்பவே அதிகம் . நம்ம சென்னையை போலவே அங்கும் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன .மெட்ரோ வந்தால் டிராபிக் நன்றாக குறையும் .ஊர் பிஸியாக இருக்கிறது . ஆங்காங்கே பிள்ளையார், சதுர்த்திக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் .

 தெலுங்குவுடன், இந்தியும் அதிகம் பேசுகிறார்கள் .எங்கு சென்றாலும் தெலுங்கா? hindi யா ? என்று கேட்கிறார்கள் . ஆனாலும் இந்தி ரொம்பவும் பூந்து விளையாடுகிறது .  நம்ம ஊரில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது எவ்வளவு நல்லது என்று அப்போதுதான் புரிந்தது . எப்படா தாய் மொழியை மறக்கலாம் என்று இருக்கிற நம்மவர்கள் , இந்தி உள்ளே வந்திருந்தால் எப்போதோ மறந்திருப்பார்கள் .
ம்ம்ம் ... அப்புறம் ....ஆந்திரப் பெண்கள் மிக அழகாக இருக்கிறார்கள் .
‘’சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஒட்டி விளையாடி வருவோம் ‘’என தலைவர் பாரதி ஏன் FEEL பண்ணி பாடினார் என அப்போதுதான் தெரிந்தது .

‘’கல்யாண மண்டபம் ஏர்போர்ட் லிருந்து ரொம்ப பக்கம் அஸ்வா’’ என்று ஏற்கனேவே சொல்லி இருந்தாள் மணப்பெண் . வந்து சேரத்தான் ஒன்றரை மணி நேரம் ஆனது ! மண்டபத்திற்குள் நுழைந்த பின்தான்  தமிழ் கேக்க முடிந்தது. மண்டபத்திற்குள் வந்த பிறகு ஒரு COMFORT ZONE க்குள் உள்ளது போன்று ஒரு உணர்வு .நான் ஏற்கனவே சொன்னது போல் , எனக்கு எப்போதும் தமிழ் காதில் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் . மாலை நேரத்தில்தான்  கல்யாணம் ! அங்கு உள்ள ஒருவரிடம் இது பற்றி கேட்டேன் .வழக்கமா ஆந்திராவில்  MID NIGHT-ல தான் கல்யாணம் பண்ணுவாங்க, இவங்கதான் மாலை நேரத்தில் பண்றாங்க என்கிறார் .அடப்பாவிகளா!?
ஆனால் எது மாறினாலும் நாதஸ்வர ட்யூன் மட்டும் மாறவில்லை .அந்த கல்யாணத்தில் எனக்கு பிடித்த விசியம் அங்கே எல்லோரும் queue ல் நின்று மணமக்கள் தலையில் அட்சதை தூவி வாழ்த்துகிறார்கள் .நம்ம ஊரில் தாலி கட்டும் போது எல்லோரும் ஒரே நேரத்தில் அட்சதை தூவுவோம் . .திருமணத்திற்கு வந்த அனைவர் தலையிலும் அட்சதை இருக்கும் .அதுவும் மணப்பெண் தோழிகளில் அழகானவர் மீது அதிக அட்சதை இருக்கும் !!!  
ஆந்திர பெண்கள் மிக அழகானவர்கள் என்ற எனது கருத்துக்கு கல்யாணத்திற்கு வந்திருந்த பெண்களும் வலு சேர்த்தார்கள்.

மறு நாள் நண்பர்கள் எல்லாம் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினோம் . நான் பெருசாக ஒண்ணும் பிளான் பண்ணவில்லை .கல்யாணத்திற்கு போய்விட்டு நைட் நல்லா தூங்கிட்டு  மறுநாள் கிளம்பி வந்துடலாம் என்று தான் போனேன் . இரண்டு இடங்களுக்கு மட்டும் போனேன் . முதலில் போனது ....



பிர்லா மந்திர். இந்தியாவில் பல இடங்களில் பிர்லா குழுமத்தால் கட்டப் பட்டுள்ள கோவில்கள் ‘’பிர்லா மந்திர் ..‘’மந்திர் என்றால் கோவில் என்று பொருளாம் .ஒரு குண்றின் மேல் கம்பீரமாக அமைந்துள்ளது, வெள்ளைப் பளிங்குளால் ஆன அந்த அழகிய கோவில். உள்ளே செல்லும்போதே CAMERA, CELL PHONE எல்லாவற்றையும் பிடிங்கி கொண்டார்கள்.பண்டைய கால சிற்பங்களில் உள்ள நுணுக்கங்களை அந்த கோவிலில் காண முடிந்தது. .எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் எழுபதுகளில் கட்டப்பட்ட ஒரு கோவிலில் எப்படி இது சாத்தியமானது ? கட்டி முடிக்க பத்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது  . ஆரம்பத்திலேயே விநாயகரும் சிவா பெருமானும் அருள் பாலித்துக் கொண்டிருந்தார்கள் .கிருஸ்துவ மதத்தின் கருத்துக்களும் ,ஜைன மதம் பற்றிய குறிப்புகளும் கூட இருந்தன .அதனால் உள்ளே மூலவர் யார் என்பது கடைசி வரை சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது . உள்ளே பார்த்தால் பெருமாள் ! நான் தீவிர சிவ பக்தன் என்பதால் நான் பெருமாளை கும்பிடுவதில்லை. ஆனால் நல்ல ரம்ம்ம்ம்ம்மியமான ஒரு சூழல். கோவிலில் எங்குமே மணி இல்லை .தியானம் செய்ய எதுவாக இப்படி அமைத்திருக்கிறார்கள் .














அங்கிருந்து பார்த்தால் உசைன் சாகர் ஏரியும் புத்தர் சிலையும் நன்றாக தெரிந்தது .அடுத்ததாக அங்குதான் செல்ல வேண்டும் என தீர்மானித்தோம் .
எனக்கு எப்பவுமே தண்ணி. போட்டிங் என்றால் பிடிக்கும் .அந்த வகையில் உசைன் சாகர் ஏரியும் மிகவும் பிடித்தது .அற்புதம் ! அழகு !  ஏரியின் நடுவே ஸ்டைல் ஆக நின்று கொண்டிருக்கிறார் புத்தர் . அந்த புத்தர் சிலைக்கு கரையில் இருந்து படகுகள் சென்று வந்து கொண்டிருந்தன . நாங்களும் படகில் ஏறி அமர்ந்தோம் . எங்களுடன் ஒரு பெண்கள் குழு தெலுங்கு பேசிய படி வந்தார்கள் .  

              ‘’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
              தோணிகள் ஒட்டி விளையாடி வருவோம்’’
தலைவர் பாட்டு,  படகில் போகும் இந்த சூழ்நிலைக்கு நன்கு பொருந்தியது .

ஒரு பெரிய நகரத்தின் நடுவே ஒரு ஏரியை இந்த அளவிற்கு சுத்தமாக பாதுகாப்பது என்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆனால் அங்கு ஓரளவு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாகவே உணர்கிறேன் . எங்கள் தோழியின் வீட்டு முன்பு கூட ஒரு சின்ன சைஸ் குளம் இருக்கிறது !!!! நம்ம ஊரில் சாத்தியமா ? சிறு நகரங்களில் கூட நீர்நிலைகளை நாம் விட்டு வைப்பது இல்லை .


                             வேளச்சேரி ஏரி
உசைன் சாகர் ஏரியை பார்த்த போது எனக்கு ஞாபகம் வந்தது நம் ‘’வேளச்சேரி ஏரி’’! நம்மவர்கள் பலருக்கு அங்கு ஏரி இருந்ததே தெரியாது . 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இருந்த ஏரியைத் தான் நாம் குப்பை கொட்டியே அழித்து விட்டோம் . இத்தனைக்கும் ஹுசைன் சாகர் எல்லாம் செயற்கை  ஏரி தான் .பதினாறாம் நூற்றாண்டில் தான் கட்டப் பட்டிருக்கிறது .அந்த புத்தர் சிலை 1992 ல்  தான் நிறுவப்பட்டிருக்கிறது .  நம் வேளச்சேரி ஏரி ஒரு இயற்கை ஏரி .இத்தனைக்கும் சதுப்பு நில ஏரி .அதாவது நம்ம பிச்சாவரம் மாதிரி .சதுப்பு நிலம் என்பது பல்லுயிரிகள் வாழும் தொகுப்பு . ஆராய்ச்சியாளர்களின்  அல்வா துண்டு ! அப்படிப்பட்ட ஒரு ஏரியை இன்று இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டோம் .இயற்கையின் நீர் வழிப்பாதைகளை மறித்து வீட்டை கட்டி விட்டு மழைக்காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் வருகிறது ,பாம்பு வருகிறது என்றெல்லாம் டிவியில் பேட்டி கொடுப்பதால் புண்ணியம் இல்லை .