Saturday, December 4, 2010

மழை


மழைக்காலங்களில்தான் பள்ளிக் குழந்தைகள் அதிகம் செய்திகள் பார்க்கிறார்கள் . பள்ளி மறுநாள் விடுமுறையா என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் .பலரும் வரலாறு காணாத மழை என்கிறார்கள் .எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை .இதுபோன்ற இதைவிட பெரிய மழைஎல்லாம் தமிழகம் சந்தித்திருக்கிறது .ஆனாலும் இனி பொழியும்  ஒவ்வொரு மழையும் நமக்கு பெரிய மழையாகத்தான் தெரியும் . காரணம் நாம் எல்லா நீர் ஆதாரங்களையும் அழித்து வருகிறோம் .அரசாங்கங்களே பெரிய ஏரிகளை அழித்துவிட்டு பேருந்து நிலையங்கள் கட்டுகின்றன .எனக்கு தெரிந்து எல்லா ஊர்களிலும் புதிய பேருந்து நிலையங்கள் எல்லாம் ஒரு  ஏரியை ஏறி மிதித்துகொண்டுதான் உருவாகியுள்ளது .
உதரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள அதன் கட்டுமானப் பணிகளின் புகைப்படங்களை பார்த்தால் தெரியும் எவ்வளவு பெரிய ஏரியை அது விழுங்கியிருக்கிறது என்று .விழுப்புரத்தில் பேருந்து நிலையம் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,மாவட்ட காவல் துறை அலுவலகம் ,கல்வி மற்றும் விவசாய துறைகளுக்கான மாவட்ட அலுவலகங்கள் எல்லாம் கம்பிரமாக நிற்பது ஒரு பெரிய ஏரியை புதைத்த இடத்திலதான் .
எனக்கு நகரங்கள் எல்லாம் நீர்நிலைகளின் சுடுகாடகத்தான்  தெரிகிறது எனது ஊரான உளுந்தூர்பேட்டையில் கூட  108 குளங்கள் இருந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது .
இன்று விரல் விட்டு எண்ணி விடலாம் அதுவும் ஒரு கையில் .
photography : asuvathaman
                                     
                                           

Wednesday, November 17, 2010

my photography

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர் !

பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை
எல்லாம் வெள்ளை நிறம் ஆகும் .

Monday, November 15, 2010

பரவட்டும் தமிழ் ஒளி

கோட்டூர் புறத்தில் துவங்கப்பட்டுள்ள நூலகத்திற்கு செல்ல வேண்டும் என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன் .மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது .சாலையில் செல்லும்போதே வியக்க  வைக்கிறது .உண்மையிலேயே நல்ல விஷயம்தான் .
400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.   தலைமுறைகளை கடந்தும் நிலைத்து நிற்கும்.

இதே போல தமிழை வளர்கிறேன் என்று சொல்லி 200 கோடிக்கு மேல் செலவு செய்து நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு ஆட்சியாளர்களின் புகழ் பாட பயன்பட்டதே தவிர புண்ணியம் ஏதும் இல்லை .அதே பணத்தை வைத்து கோட்டூர் புரம் நூலகம் போல் தமிழ் மொழிகென தனி நூலகம் அமைத்து இருந்தால் காலம் கடந்து நின்றிருக்கும் .தனியொரு மொழிக்கென இப்படியொரு நூலகம் அமைத்திருந்தால் உலகம் முழுதும் வியந்து கொண்டாடியிருக்கும் .தமிழ் ஆராய்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய
மைல் கல்லாக இருந்திருக்கும்.
 ஒளி வேண்டும் என்றால் ஒரு விளக்கு வாங்குங்கள் . நீங்கள் பட்டாசு வாங்குகிறீர்கள் ,
அது நிரந்தர ஒளியை தராது .

சமிபத்தில் இணையத்தில்   "மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்" (http://pm.tamil.net/) பார்த்தேன் .உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய முயற்சி . தமிழ் இலக்கியங்களை பதிவு செய்துள்ளதோடு இலவசமாகவும் தருகிறார்கள் . அதிகம் இணைய அறிமுகமில்லாத தமிழ் ஆர்வமுள்ள என் நண்பர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் நான் பரிந்துரை செய்தேன் .
இது போன்ற ஆக்கப்பூர்வ முயற்சிகள் தொடர்ந்தால்    
" தமிழ் இனி  மெல்ல வாழும் "

Monday, November 8, 2010

சட்டக் கல்வியில் உளவியல்

                                                
மற்ற துறைகளுக்கில்லாத சில சிறப்பியல்புகள்   சட்டத்துறைக்கு உள்ளது . மற்ற துறைகளில் படிப்பவர்களுக்கும் , பணியிளிருப்பவர்களுக்கும் தொடர்புகள் அதிகம் இருப்பதில்லை .ஆனால்  சட்ட துறையில் இந்த இரு தரப்பினர்க்கும் தொடர்பு அதிகம் .அதுமட்டுமல்லாது.   சட்டப் பல்கலைகழகங்களில்  பாடத்திட்டங்கள் மற்றும் பிற அம்சங்கள் குறித்த ஆலோசனைகள் "BAR COUNSEL OF INDIA ".வால் வழங்கப்படுகிறது .
அதாவது வளரும் வழக்கறிஞர்கள் சிறப்பனவர்களாக உருவாக்குவதில் பணியில் உள்ள வழக்குரைஞர்கள் பங்கேற்கின்றனர் . வேறு எந்த துறைகளிலும் பணியில் இருப்பவர்கள் மாணவர்களை உருவாக்குவதில்லை .ஆகவே சட்ட கல்லூரிகளிலிருந்து சிறந்த சட்ட வல்லுனர்கள் உருவாக வேண்டும் என்றால்  வழக்குரைஞர்களின் பங்கு அவசியம் .

சட்டக்கல்வியில் உளவியல் (psychology) ஒரு பாடமாக  சேர்க்கப்பட வேண்டும். மனிதனின் மனதினை பற்றி புரிந்து கொண்டால் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும் .
சட்ட பாடங்களில் சட்டவியல் (jurisprudence),மக்களாட்சி தத்துவங்கள்  (democracy ) போன்ற பாடங்களும் மனிதனின் உளவியல் பற்றி பேசுகின்றன .
ஜீன்  பேச்சலர் ன் "Analytical survey of Democracy" என்ற நூலில் மனிதனையும் அவன் மனநிலையையும் பல்வேறு விதமாக பிரித்து ஆராய்கிறார்.சட்ட கல்வியில் சேர்க்கப்பட்டுள்ள "political science " ன் நோக்கமும் சமுகத்தை புரிந்து கொள்வேதற்கே .'தனிப்பட்ட மனிதனின் மனதினைபற்றி புரிந்து கொண்டவன் ஒட்டு மொத்த மனித சமுகத்தின் மன நிலையையும் அறிய முடியும் ' என்கிறார் விவேகனந்தர் .

                                                  
உளவியலையும் ஒரு பாடமாக சேர்த்தால் நமது சட்டத்துறைக்கு சிறந்த சட்ட வல்லுனர்கள் கிடைப்பார்கள் என்பதில் ஐயமில்லை .
photography : asuvathaman