Thursday, December 15, 2011

காக்கைக்கு சோறிட்ட கருப்பு மீசைக் காரன் !


டிசம்பர் 11 ,
பாரதியின் பிறந்த நாள் என்பதை மறக்கவில்லை , அன்று டிசம்பர் 11  என்பதை மறந்து விட்டேன் . ஞாயிற்று கிழமையாதலால் சோம்பிக்கிடந்த எனக்கு மாலையிலிருந்து ஏனோ, பாரதியின் ஞாபகம் .நண்பனுடன் பாரதியைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன் . எனக்கு ஒரு பாரதியார் கவிதைகள் வாங்கி குடுடா ,என்றான் என் நண்பன். .பின்பு நண்பனுக்கு அலை பேசி வாங்க மயிலை சென்றோம் அப்படியே என் வாகனம் போன போக்கில் வந்தடைந்த இடம் திருவல்லிக்கேணி . ஒருவகையில் எனக்கு திருவல்லிக்கேணி சொந்த வீடு போன்றது .சென்னை வந்த புதிதில் எனக்கு அடைக்கலமும் ஆதரவும் அளித்தது இந்த திருவல்லிக்கேணிதான். திருவல்லிகேனிக்கு வந்து நிறைய நாள் ஆகிவிட்டதால் சொந்த ஊருக்குள் நுழைந்ததை போல் ஒரு உணர்வு ,சற்று நேரம் கழித்து கிளம்ப எத்தனித்த பொது பாரதி சாலையில் , பாரதியின் கம்பிரமான படம் கண்ணில் பட்டது ''பாரதி மெஸ்'' என்ற பெயருடன் . உள்ளே நுழைந்தோம்  மெஸ் -ன் பாரதியின் படத்தை வைத்து பூஜித்து இருந்தார்கள் .மெஸ்-ன் சுவர்களில் எல்லாம் பாரதியின் படங்கள் அது பற்றிய குறிப்புகளுடன் , அதுமட்டுமில்லாமல் பாரதியார் கவிதைகளும் சகாய விலைக்கு வைத்திருக்கிறார்கள் .நண்பன் ஆசைப்படியே அவனுக்கு பாரதியாரகவிதைகள் வாங்கி  கொடுத்தேன் .

ஏன்? சச்சின் போன்றவர்களுக்கு தான் theme  restaurant  கட்ட வேண்டுமா ? ,
ஒரு சில புகைப்பட குறிப்புகளிலே பாரதி பற்றி தெரியதவர்களுக்கும் அவரைப் பற்றி புரிய வைக்கும்  அளவிற்கு இருக்கின்றன  அந்த குறிப்புகளும் புகைப்படங்களும் . அன்று பாரதியின் பிறந்த நாள் என்பதை நினைவுபடுத்தியதுடன் அவரை வணங்கும் வாய்ப்பையும் அளித்தது அந்த மெஸ் .உண்மையிலேயே நல்ல விஷியம்தான் .அதிலிருந்த பெருன்பான்மை புகைப்படங்கள் நான் ஏற்கனவே கண்டவைதான், ஆனால் அதிலொரு புகைப்படம் கண்டிராதது அந்த குறிப்பும் பாரதியை எண்ணி வியக்க வைத்தது . ஒரு குழு புகைப்படத்தில் பாரதி தனது வயதிற்கு வந்த பெண்ணிற்கு அருகில் தனது நண்பரை (அவருக்கும் இள வயது )  நிற்க வைத்திருக்கிறார் , அந்த காலத்தில் அது மிகப்பெரிய விஷயம் . பெண்ணிற்கு எந்த வித உரிமையும் வழங்கப்படாத காலக் கட்டத்தில் புரட்சிக்கவியால் மட்டும் இப்படி முற்போக்குத்தனமாக  சிந்திக்க முடிந்தது .

                                         '' நிமிந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
                                           நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
                                           திமிர்ந்த ஞான செருக்கும் இருப்பதால்
                                           செம்மை மாதர் திறம்புவதில்லையாம் ''
என்று வெறும் வார்த்தையில் சொன்னவனில்லை பாரதி .

இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் ,புகைப்படங்கள் மற்றும் குறிப்புகள் மூலமாக ஒரு மனிதனின் தீர்க்கம், சிந்தனை ,மனோ சக்தி போன்றவற்றை புரிந்து கொள்ள முடிகிறது   . நான் அலை பேசியில் எடுத்த புகைப் படங்களை   எப்போதும் பத்திரப்படுத்தி வைப்பேன் , ஏனென்றால் சில வருடங்களுக்கு பிறகு அந்த புகைப் படங்களை பார்க்கும்பொது பலதரப்பட்ட உணர்வுகளை தருகிறது . ஒருவரைப் பற்றி நான் புரிந்து கொள்ள எத்தனித்த போது அந்த நபரின் face  book புகைப் படங்களை வைத்து ஒரு சில விசியங்களை புரிந்து கொண்டேன் என்று சொன்னால் நம்புவீர்களா?

 அலை பேசி யின் புகைப் படங்களை பத்திரப்படுத்துங்கள் ,அது டைரியின் பக்கங்களை போன்றது .

No comments:

Post a Comment