Wednesday, December 28, 2011

மிதிவண்டி பயணம்

                                                           photography : asuvathaman

புதிதாக சைக்கிள் ஒன்று வாங்கி சைக்க்ளிங் போக ஆரம்பித்திருக்கிறேன் . தினமும் தேனாம்பேட்டையில் இருந்து மெரினா வரை . கிட்டத்தட்ட சைக்கிள் ஓட்டி ஆறு  வருடங்களுக்கு மேல் ஆகிறது .கடைசியாக கொடைக்கானல் சுற்றுலாவில் ஒட்டியதாக நினைவு.   மீண்டும் பள்ளி பருவத்திற்கு போய்விட்ட ஒரு உணர்வு . மார்கழி மாசக் குளிர் வேறு அதில் ஒரு சிறப்பு .அப்போதெல்லாம் சைக்கிள் எடுத்தால் மின்னல் வேகம் தான் , எங்கள் ஏரியா மகளிர் எல்லாம் ' உங்கள் பையனை சைக்கிள் பொறுமையாக ஓட்ட சொல்லுங்கள்'  என்று எங்கள் வீட்டுக்கு வந்து பஞ்சாயத்து வச்ச காலமெல்லாம் நினைவுக்கு வந்தது . அப்போதெல்லாம் சைக்கிளில் கிலோ மீட்டர் கணக்காக சுற்றி இருக்கிறேன் .எப்போதாவது நானும் சகாய ராஜும் வேட்டைக்கு கிளம்பினோம் என்றால் ஏழு எட்டு மணி நேரம் ஆகும் திரும்பி வர . கொக்கு ,முயல் என சுட்டு கொண்டுவருவோம் .
அந்த சின்ன வயசில் இருந்த stamina இப்போது இல்லை என்றே தோன்றுகிறது .இப்போதெல்லாம் இயந்திரங்களின்  குதிரை திறனையே நம்ப வேண்டியிருக்கிறது . சைக்கிளை எடுக்கும் பொது கை தன்னை அறியாமல் ஹென்பரில் சாவி போட போகிறது .இத்தனை நாட்களாக எனது  காரும்,பைக்கும் எனது திறனை எந்த அளவிற்கு மறக்க வைத்து விட்டன ! .பள்ளி பருவத்தில் நான் சைக்கிள் கை விட்டுக் கொண்டு ஓட்டுவதில் கில்லாடி . இப்போது முயற்சி செய்து பார்த்தேன் , முடியவில்லை.

காந்தி சிலை அருகே மிதிவண்டியை நிறுத்தி விட்டு போனால் அங்கே இயற்கை உணவு விற்கிறார்கள் .முளை கட்டிய தானியங்கள் , பச்சை காய்கறிகள் ,பப்பாளி என .

 பலதரப்பட்ட மனிதர்கள் , இரவு  கடற்கரையில் உறங்கி விட்டு வீடு திரும்பும் பக்கத்து குப்பத்தை சார்ந்த பையன் முதல் , Reebok  , ray ben  னுடன்
sit  ups செய்யும் இளைஞன் வரை.       ஒருவர் உலக மக்களை ஏளனமாக பார்த்தபடி (என்னை உட்பட ) யோகா செய்ய ஆரம்பித்தார் . யாரிடமோ பந்தயம் கட்டியிருப்பார் போல , ரொம்ப கஷ்டப்பட்டு ஹலாசனம்  செய்து கொண்டிருந்தார் . பின் சர்வங்கசனம் போட்டார் , நான் அவரிடம் முதுகை முன் வளைக்கும் யோகா செய்தால் தொடர்ந்து ,முதுகை பின்னால் வளைப்பது மாதிரியான யோகா தான் செய்ய வேண்டும் .இப்போது நீங்கள் தனுராசனம் செய்ய வேண்டும் என்று சொன்னேன் .இந்த பக்கம் பார்த்தால் ஒரு குரு குழந்தைகளுக்கு கரததே சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார் . அப்படியே கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆக எல்லாரையும் வேடிக்கை பார்த்து விட்டு கிளம்பினால் , திரும்பி வரும்போது பள்ளிக் குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கு சென்று கொண்டிருப்பார்கள் .அவர்களோடு சேர்ந்து சைக்கிள் ஓட்டுவது தனி சந்தோசம் .
சைக்கிளிங் போவதினால் வரும் மருத்துவ பயன்கள் பற்றி தேவைக்கதிகமாகவே நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் .ஆகையால் எனது practical  tips

#  தினமும் புது புது வழிகளில் செல்லுங்கள் . அல்லது தினமும் ஒரு ஏரியா விற்கு செல்லுங்கள் . புது புது இடங்களை பார்க்க நேரிடும் .
#  தூரமும் ,நேரமும் இடம் கொடுத்தல் கடற்கரைக்கு செல்லுங்கள் .
# சைக்கிளில் செல்லும் போது ஓரளவிற்கு ட்ராபிக் மீறலாம் தான் என்றாலும் அது எதிரில் வருபவருக்கு தெரியாது என்பதை நினைவில் கொள்ளவும் .
#  எதோ நாம் பயங்கரமாக உடற்பயிற்சி செய்கிறோம் என்றெல்லாம் நினைக்காமல் ,ஜாலி யாக வேடிக்கை பார்த்துக்கொண்டு சைக்கிள் ஒட்டுங்கள் . மனசு ரிலாக்ஸ் ஆகும் .
                                                                                                                 
                                                                   ########

No comments:

Post a Comment